search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் துன்புறுத்தல்"

    • 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு 1 மாதம் சிறை தண்டனை
    • முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும்

    மதுபோதையில், பெண் காவலரிடம் 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் 1 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

    துர்கா பூஜையை ஒட்டி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, லால் டிக்ரே பகுதிக்கு காவலர்கள் சென்று கொண்டிருந்தனர். வேபி ஜங்ஷன் வழியாக வந்த காவல்துறையினருக்கு, அப்பகுதியில் ஒருவர் பிரச்சனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றனர். அந்த இடத்தில பிரச்சினை செய்த ஜனக் ராம் என்ற நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    அந்த நேரத்தில் ஜனக் ராம், ஒரு பெண் காவலரிடம் 'ஹாய், அன்பே, அபராதம் விதிக்க வந்தீர்களா?' என கேட்டுள்ளார். இது தொடர்பாக மாயாபந்தர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

    கடந்த வருடம், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஜனக் ராமிற்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஜனக் ராம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

    அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், "முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும். குறிப்பாக , குடித்திருக்கும் ஒரு ஆண், முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது இன்னமும் தீவிரமான குற்றம் என கருத்து தெரிவித்தது.

    பின்னர், குற்றவாளியின் 3 மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ரத்தக்காயங்களுடன் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • பாலியல் ரீதியாக அந்த பெண் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 43 வயதான ஒரு பெண் தனது பெற்றோர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் உணவு அளித்து வந்தனர்.

    கொடூர கொலை

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த பெண் தனது வீட்டின் முன்பு தலை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இறந்த பெண்ணின் உடலை செங்கோட்டை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவரது உடலில் ரத்தக்காயங்கள் அதிகமாக இருந்ததும், அவர் மர்ம நபர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அதன் முடிவு வெளியான பின்னரே அவர் கற்பழிக்கப் பட்டாரா? என்பது தெரியவரும். அதேநேரத்தில் அவரது உடலில் இருந்த காயங்களால் பெண்ணை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? என்று அந்த பகுதியில் உள்ள வர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும்.

    தாராபுரம் :

    குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பது தான் போக்சோ சட்டம். குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை என அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான்.

    குழந்தைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, குழந்தை மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. அது பெற்றோர், உறவினர், ஆசிரியர், மருத்துவர், காவலர் என அனைவருக்கும் பொருந்தும்.போக்சோ சட்டம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இரு பாலினருக்கும் பொருந்தும். திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குறித்தான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய நபர்கள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.

    பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய தாமதம் கூடாது என போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு தகுந்த அறிவுரை வழங்கி வருகின்றனர். கணவன், மனைவி பிரிந்த நிலையில் கவனிக்க, வளர்க்க ஆளில்லாத சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.பெரும்பாலான வழக்குகளில் இரண்டாவது தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.

    குழந்தை வன்முறை குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியுள்ளதாவது :- குழந்தைகளை தவறான வார்த்தைகளால் பேசுதல், குழந்தைகளை பாதிக்கும் கேலி, கிண்டல் செய்தல், ஆபாச படங்கள் காண்பிப்பது, பேசுவது, குழந்தை விரும்பத்தகாதவாறு உடல் பாகங்களை தொடுதல், குழந்தையின் தன்னம்பிக்கையை இழக்க செய்தல், தன் கோபத்தை தணிக்க குழந்தை மீது தீங்கிழைத்தல், குழந்தையை தன் வயப்படுத்தல், வேலையாளாக பயன்படுத்துவது, கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது, உணர்வுகளை புறக்கணித்தல், பள்ளியில் உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாக்குவது, மருத்துவ தேவைகளை புறக்கணித்தல், கல்வியின் அவசியத்தை புறக்கணித்தல், கண்காணிப்பு இல்லாமல் விட்டு விடுதல் ஆகியவை குழந்தை வன்முறை என வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும் போலீசார் கூறுகையில், ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் படி தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சென்று போக்சோ சட்டம் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் விழிப்புணர்வு ஏற்பட்டு இது தொடர்பான புகார்கள் அதிகம் வருகின்றன. அதை உடனடியாக பதிவு செய்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு குழந்தைகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. போக்சோ உதவி பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன என்றனர். 

    கேரளாவில் சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியிடம் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் தொழிலதிபர் ஈடுபடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள எடப்பால் என்ற இடத்தில் உள்ள ஒரு சினிமா தியேட் டரின் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயதுக்காரர் ஒருவர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார்.

    அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

    சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு காமிரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் மைதீன்குட்டி என்பது தெரியவந்தது. தொழில் அதிபரான அவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    அந்த சிறுமியுடன் தியேட்டருக்கு வந்த பெண்ணையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். அந்த பெண் சிறுமியின் தாயாரா? அவருக்கும் சிறுமிக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சிறுமிக்கு தியேட்டரில் செக்ஸ் கொடுமை நடந்தது பற்றி உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும், அதனை தடுக்காத அந்த சிறுமியுடன் வந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) மோகன்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.  #tamilnews
    ×